இன்னும் சில வாரங்களில் வெளியாகவுள்ள ஆப்பிள் iPhone 13-இல் செயற்கைக்கோள் தொடர்பு அம்சம் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன் மூலம் நெட்வொர்க் இல்லாத இடங்களில் குறுஞ்செய்தி மற்றும் வாய்ஸ் கால்கள் அனுப்ப முடியும் என கூறப்படுகிறது.
ஆப்பிள் போன் வரிசையில் 5G பயன்பாடு கொண்ட iPhone12 சீரியஸ் கடந்தாண்டு வெளியான நிலையில், இந்தாண்டு வெளியாக உள்ள iPhone 13-இல் ஒரு புதிய செல்லுலார் ரேடியோ தொழில்நுட்பத்தை சேர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது லோ-எர்த்-ஆர்பிட் (LEO) செயற்கைக்கோள் தொடர்பு அம்சத்துடன் வரலாம் என ஆய்வாளர் மிங்-சி குவோ கூறியுள்ளார்.
இதன் மூலம் நெட்வொர்க் சிக்னல் இல்லாத இடங்கள் மற்றும் சிக்னல் மிக வீக்காக உள்ள பகுதியில் வாய்ஸ் கால்கள் மற்றும் குறுஞ்செய்திகளை அனுப்ப முடியும்.
புதிய தொழில்நுட்பம் செல்லுலார் இணைப்பை ஐபோன்கள் எவ்வாறு கையாளுகின்றன என்பதற்கு ஒரு பெரிய மேம்படுத்தலாக இருக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்த தொழில்நுட்பத்தில் மொபைல் சாதனம் செயற்கைக்கோள் அடிப்படையிலான தகவல் தொடர்புகளை உருவாக்க அனுமதிக்கிறது என்றும் மிங்-சி குவோ தெரிவித்துள்ளார்.
Discussion about this post