காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரத்துக்கு கடும் சிக்கலை ஏற்படுத்தி இருக்கும் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு, கடந்து வந்த பாதை…
ப. சிதம்பரம் வெளிநாடு செல்வதை தடுக்கும் விதத்தில் தேடப்படும் நபராக சிபிஐ அறிவித்துள்ளது. லுக்அவுட் நோட்டீஸ் விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
2017 ம் ஆண்டு, மே 17: ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக 305 கோடி நிதி பெற்றதாக கார்த்தி சிதம்பரம், அவரின் தந்தை ப.சிதம்பரம் ஆகியோர் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.
2017, ஆகஸ்ட் 10: கார்த்தி சிதம்பரம் உள்பட 4 பேருக்கு எதிராக வழங்கப்பட்டு இருந்த லுக் அவுட் நோட்டீஸை சென்னை உயர் நீதிமன்றம் நிறுத்தி வைத்தது.
2017, ஆகஸ்ட் 14: கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக வழங்கப்பட்டு இருந்த லுக் அவுட் நோட்டீஸை நிறுத்தி வைத்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
2017,டிசம் 8: ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் தனக்கு சிபிஐ அனுப்பிய சம்மனுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரம் மனுத்தாக்கல்
2018, பிப்16: கார்த்தி சிதம்பரத்தின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சொத்துக்களை பராமரித்து வந்த அவரின் ஆடிட்டர் எஸ். பாஸ்கர ராமன் கைது
செய்யப்பட்டார்
2018, பிப். 28: வெளிநாடு செல்ல முயன்ற கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ சென்னை விமான நிலையத்தில் கைது செய்து, டெல்லிக்கு அழைத்துச் சென்றது.
2018, மார்ச் 23: 23 நாட்கள் சிறைவாசத்துக்கு பின்பு கார்த்தி சிதம்பரத்துக்கு ஜாமின் கிடைத்தது.
2018, ஜூலை 25: ப.சிதம்பரத்தை கைது செய்ய உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.
2018, அக்.11: இந்தியா, இங்கிலாந்து, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் தொடர்புடைய கார்த்தி சிதம்பரத்தின் 54 கோடி ரூபாய் சொத்துக்களை அமலாக்கப் பிரிவு முடக்கியது.
2019, பிப்.22: ப.சிதம்பரத்தின் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய மத்திய அரசிடம் இருந்து அனுமதி பெற்றது சிபிஐ.
2019, மே 29: கார்த்தி சிதம்பரம் செலுத்திய 10 கோடியை திருப்பித் தரக்கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2019, ஆக்.1: டெல்லி இல்லத்தை காலி செய்யக் கோரி அமலாக்கப்பிரிவு அளித்த நோட்டீசுக்கு எதிராக கார்த்தி சிதம்பரம் மனுத் தாக்கல்
2019, ஆக.20: ஐஎன்எஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் முன் ஜாமின் மனுவை டெல்லி உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
2019, ஆக 21: ப சிதம்பரத்தின் முன்ஜாமின் மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ள நிலையில், வெள்ளிக்கிழமை விசாரிக்க கூடும் எனத் தகவல் வெளியாகி உள்ளது.
Discussion about this post