மும்பை பங்கு சந்தை ஆயிரம் புள்ளிகள் வரை சரிந்ததால் ரூ.4 லட்சம் கோடி அளவிற்கு முதலீட்டாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
அந்நிய முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை திறம்பப் பெறுவதாலும், கச்சா எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாலும் தொடர்ந்து சில மாதங்களாக இந்திய பங்கு சந்தையில் நிலையில்லாத போக்கு காணப்படுகிறது.
இந்நிலையில் இன்று இந்திய பங்கு சந்தை வரலாறு காணாத அளவிற்கு சரிவை சந்தித்துள்ளது. இன்று காலை மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் தொடங்கியதும் 1029 புள்ளிகள் சரிந்து 33 ஆயிரத்து 729 புள்ளிகளாக சரிந்து முதலீட்டாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
அதன்பிறகு சென்செக்ஸ் தற்போது சரிவிலிருந்து சிறிது மீண்டு 821 புள்ளிகளாகி 33 ஆயிரத்து 939 புள்ளிகளாக உள்ளது. தேசிய பங்கு சந்தை நிஃப்டி 254 புள்ளிகள் சரிந்து 10 ஆயிரத்து 205 புள்ளிகளாக உள்ளது.
பங்கு சந்தையின் இந்த வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு சுமார்ரூ.4 லட்சம் கோடி அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ், எஸ் பேங்க் , ஓ.என்.ஜி.சி போன்ற பங்குகள் வரலாறு காணாத சரிவை சந்தித்து முதலீட்டாளர்களுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளன.
Discussion about this post