ஆர்எஸ்எஸ் பிரமுகர் ராமலிங்கம் கொலை தொடர்பாக தென்காசியில் கைது செய்யப்பட்ட அகமது சாலிக் வீட்டில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
தஞ்சை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் ராமலிங்கம் கடந்த பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அமைப்பு விசாரணை நடத்தி வருகிறது. இதனிடையே நெல்லை மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த அகமது சாலிக் என்பவரை என்.ஐ.ஏ அதிகாரிகள் கடந்த 27ம் தேதி கைது செய்தனர். இந்நிலையில், அகமது சாலிக்கின் வீட்டில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினர். 2 மணி நேரத்திற்கும் மேலாக இந்த சோதனை நடத்தப்பட்டது. சோதனை காரணமாக அப்பகுதியில் அதிகளவு போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
Discussion about this post