பள்ளி குழந்தைகள் பாதுகாப்புக்காக இந்தியாவிலேயே முதல் முறையாக 4ஜி தொழில்நுட்பம் கொண்ட அதிநவீன ஸ்மார்ட் வாட்ச்போனை பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிமுகப்படுத்தி வைத்தார்.
குழந்தைகளின் பாதுகாப்பிற்காக 4ஜி தொழில்நுட்பம் கொண்ட ஓஜாய் (OJOY ) என்ற ஸ்மார்வாட்ச்போன் தனியார் நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக கொண்டுவந்த இந்த ஸ்மார்ட்வாட்ச் போனை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிமுகம் செய்துவைத்தார். குழந்தைகள் பாதுகாப்பாக இருப்பதை பெற்றோர்கள் அறிந்துகொள்ளும் வகையில் இந்த ஸ்மார்ட் வாட்ச்போன் உருவாக்கப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், உலக முதலீட்டாளர்கள் மாநாடு மூலம், 3 லட்சம் கோடிக்கு மேல் முதலீடு பெறபட்டிருக்கிறது என்றும் 10 லட்சத்து 50 ஆயிரம் பேர் மறைமுகமாக வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்றும் தெரிவித்தார்.
Discussion about this post