கத்தார் தலைநகர் தோஹாவில் மின்சாரத்தால் ஓடக்கூடிய பேருந்து அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து அதன் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
கத்தாரில் சுற்று சூழலை பாதுக்கும் வகையில் மின்சார பேருந்தை அந்நாட்டு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. தலைநகர் தோஹாவில், தொடங்கப்பட்ட சோதனை ஓட்டம் இம்மாதம் 24 ஆம் தேதி வரை நடைபெறும் என கூறப்பட்டுள்ளது. அந்நாட்டில் நிலவி வரும் வெப்பத்தை அடிப்படையாக கொண்டு குளிரூட்டப்பட்ட வசதியுடன் இந்த பேருந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சராசரி பேருந்த விட 3 மடங்கு நீளமுள்ள இப்பேருந்திற்கு சார்ஜ் செய்யும் மின்சார மையமும் அமைக்கப்பட்டுள்ளது. பயணிகள் வசதியாக பயணிப்பதற்கு ஏற்ப இப்பேருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக சீனாவில், மின்சார பேருந்து அறிமுகப்படுத்தப்பட்ட போது அப்பேருந்திற்கென தனி இரும்பு பாதைகள் அமைப்பட்டது. ஆனால் கத்தாரில் அறிமுகப்படுத்தப்பட்ட பேருந்துக்கு சாலையிலேயே செல்லும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஜுஜோ எலக்ட்ரிக் லோகோமோடிவ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட இப்பேருந்து மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக்கூடியது என்றும், சுற்று சூழல் பாதிக்காத வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post