ரிசர்வ் வங்கி தனது இணையதளத்தில் புகார் மேலாண்மை அமைப்பு என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
வர்த்தக வங்கிகள், நகர்ப்புற கூட்டுறவு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு எதிரான புகார்களை தெரிவிக்கும் வகையில் ரிசர்வ் வங்கி, தனது இணையதளத்திலேயே புகார் மேலாண்மை அமைப்பு என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதை ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் துவக்கி வைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சக்தி காந்த தாஸ், இந்த புதிய மொபைல் செயலியின் மூலம் மக்கள் தெரிவிக்கும் புகார்கள் உடனடியாக உரிய அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு, உரிய தீர்வு காணப்படும் என்றும், புகார் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த தகவல் வெளிப்படையாக அதில் பதிவேற்றப்படும் என்றும் தெரிவித்தார். அதேபோல், புகார் மீது நடவடிக்கை திருப்தி இல்லை என்றால், மேல்முறையீடு செய்யவும் அதில் வசதி செய்யப்பட்டிருப்பதாகவும், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறினார்.
Discussion about this post