உணவு உண்ண தகுந்த இடம், தரமான உணவு எங்கு உள்ளது என்பதை மக்கள் அறிந்து கொள்ள Safe Serve Portal என்ற இணையதள பக்கத்தை தமிழ்நாடு உணவு பாதுகாப்புதுறை அறிமுகப்படுத்தியுள்ளது.
உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள தனியார் உணவகத்தில், உணவகங்கள் மற்றும் உணவுகளின் தரம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏறபடுத்துவது தொடர்பாக விழிப்புணர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு உணவு பாதுகாப்பு துறையின் சார்பில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நட்சத்திர விடுதிகளின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அதன் பிறகு, செய்தியாளர்களை சந்தித்த, உணவு பாதுகாப்பு துறையின் சென்னை மண்டல நியமன அலுவலர் ராமகிருஷ்ணன், Safe serve portal இணையதளம் மூலம், தரமான மற்றும் பாதுகாப்பான உணவு எங்கு கிடைக்கிறது என்று பொதுமக்கள் தெரிந்து கொண்டு பயன்பெறலாம் என்று தெரிவித்தார். இந்த இணையதளத்தில் தரமான உணவகங்களுக்கான ரேட்டிங் கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Discussion about this post