வரும் மக்களவை தேர்தலில் விதிமீறல்கள் குறித்த புகார்களை தெரிவிக்க சி- விஜில் என்ற புதியசெயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
விரைவில் நடைபெற உள்ள மக்களவை தேர்தல் குறித்த அறிவிப்பு எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் நாம் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் வகையில் விவி பேட் இயந்திரங்களை அதிகளவில் பயன்படுத்தப்பட உள்ளது.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தேர்தலை சந்திக்க தமிழகம் தயாராக உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
Discussion about this post