மக்களவை தேர்தலில் போட்டியிட தேமுதிக சார்பில் விருப்ப மனு தாக்கல் செய்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது.
நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் தேமுதிக இணைந்து 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்தநிலையில், சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்பட்டு வருகிறது. தேமுதிக தலைவர் விஜயகாந்த் முன்னிலையில் துணை செயலாளர்கள் எல்.கே சுதிஷ், பார்த்தசாரதி, திருப்பூர் அக்பர், அவைத்தலைவர் டாக்டர் இளங்கோவன் ஆகியோர் அடங்கிய குழு நேர்காணல் செய்து வருகிறது. நேர்காணலில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post