இந்திய இணைய சேவைத்துறையால் நான்காண்டுகளுக்குள் 1.2 கோடி வேலைவாய்ப்புகள் உருவாகும் என ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.
ஆன்லைன் வர்த்தகம், டிஜிட்டல் விளம்பரம், டிக்கெட் முன்பதிவு போன்ற இந்திய இணையதள சேவைத் துறையின் தற்போதைய மதிப்பு 3 ஆயிரத்து 380 கோடி டாலர் ஆக உள்ளது. இத்துறை 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கியுள்ளது. இதன் மதிப்பு 2022-க்குள் 12 ஆயிரத்து 400 கோடி டாலராக வளர்ச்சி பெரும் என இந்திய மொபைல் மற்றும் இணையதள சங்கத்தின் புதிய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது.
இதன் மூலம் பல்வேறு துறைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் 1 புள்ளி 2 கோடி புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனையை கணக்கில் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post