அனைத்து கிராமங்களுக்கும் இணையதள வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார். வேலூர் மாவட்டம் பானாவரம் கூட்டு ரோடு பகுதியில், அரக்கோணம் மக்களவை பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி மற்றும் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் சம்பத் ஆகியோரை ஆதரித்து முதலமைச்சர் வாக்கு சேகரித்தார். அப்போது, பேசிய அவர், விவசாயிகளுக்கு எந்த நன்மையும் திமுக ஆட்சியில் கிடைக்கவில்லை என்று கூறினார்.
சோளிங்கர் பகுதியில் தனியார் காலணி தொழிற்சாலை அமைக்கப்படும் என்றும் இதன் மூலம் 20 ஆயிரம் பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காவேரிப்பாக்கம் பகுதியில், அரக்கோணம் மக்களவை தொகுதி பாமக வேட்பாளர் ஏ.கே.மூர்த்தி மற்றும் சோளிங்கர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சம்பத் ஆகியோரை ஆதரித்து அவர் வாக்கு சேகரித்தார்.
Discussion about this post