இன்று சாதனை படைத்த அத்தனை மனிதர்களுக்கு பின்னாலும் சொல்லப்படாத வலிகளும், ரணங்களும் மறைந்து இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை. அப்படி மறைத்து வைக்கப்பட்ட வலிகளின் பெயர் தான் அங்கிதா ஸ்ரீவஸ்தவா. இவர் மத்தியப் பிரதேச மாநிலம், போபாலை சேர்ந்த தடகள வீராங்கனை ஆவர். இவரை பற்றி அறிந்திராதவர்கள் இல்லை. ஏனென்றால், இவர் செய்த விஷயம் அனைவரின் மத்தியிலும் உணர்ச்சிவசப்படுத்தியது. அம்மானா யாருக்குதான் புடிக்காது நாயுக்கும் புனைக்கும் கூடதான் புடிக்கும் என்பதை போல தடகள வீராங்கனை அங்கிதா அவர்கள் அவரின் அம்மவிற்கு கல்லீரல் தானம் செய்தார். அங்கிதாவின் அம்மா கல்லீரல் அழற்சியால் பதிக்கப்பட்டு இருந்தார். அப்பொது அங்கிதாவின் வயது13.
அந்த நேரத்தில் அவரின் அம்மாவின் உடல் நிலை மிகவும் மோசமாக மாறியது. இதற்கு அறுவை சிகிச்சை செய்தால் மட்டுமே காப்பாற்ற முடியும் என மருத்துவர்கள் கூறினார்கள். அதற்கு அவரது கல்லீரலை தானம் செய்வதாக கூறினார் ஆனால் அப்போது அவருக்கு வயது 13 என்பதால் செய்ய முடியாது என மருத்துவர்கள். கூறினார்கள். பனினெட்டு வயதானால் மட்டுமே தானம் செய்யமுடியும் என்று கூறினார்கள். இதற்கிடையில் கல்லீரல் தானம் செய்ய அங்கிதாவின் குடுப்பதினர் நாடினர். ஆனால் எந்த பயனும் அளிக்கவில்லை என்று தான் கூறவேண்டும். காலங்கள் ஓடியது அன்று அங்கீதா கூறியப்படியே தனது 18 வயதில் அங்கிதா தனது தாய்க்கு கல்லீரல் தானம் செய்தார்.
அறுவை சிகிச்சைக்கு பிறகு அங்கிதா:
அங்கிதாவின் உடல் நிலை அறுவை சிகிச்சைக்கு பிறகு மோசமானது. நான்கில் மூன்று பங்கு கல்லீரல் அகற்றுப்பட்டிருந்தால், அதிகம் அசைவதற்கே அங்கிதா சிரமப்பட்டு கொண்டிருந்தார். அவர் சிகிச்சைக்கு பிறகு உடல் முழுவதும் பல்வேறு விதமான குழாய்களும், சிறிய மருத்துவ உபகரணங்களும் பொருத்தப்பட்டிருந்தன. முக்கியமாக ‘மோர்பின்’ என்னும் வலி நிவாரண மருந்தை செலுத்துவதற்கான குழாய் அங்கிதாவின் கையில் பொருத்தப்பட்டிருந்தது. வலிகள் ஏற்படும் போதெல்லாம் செவிலியர் அவருக்கு அந்த மருந்தை செலுத்துவார் என்று கூறினார். இந்த அறுவை சிகிச்சைகு பிறகு இவரது தாயின் உடல் முன்பு போலவே பழைய நிலைக்கு மாறியது. இதனை பார்த்து அங்கிதா மிகவும் சந்தோசப்பட்டார். இந்த மகிழ்ச்சியெல்லாம் சிறிது காலமே கைகொடுத்தது. சிகிச்சைக்கு பிறகு அவரின் தாயின் உடலானது மூன்று மாதங்கள் மட்டுமே உயிருடன் இருந்தார். பிறகு இறந்துவிட்டதாக அங்கிதா கூறினார். ஏற்கனவே உடலளவில் வலியை அனுபவித்து வந்த எனக்கு அம்மாவின் மரணம் மனதளவில் கடுமையாக பாதித்தது” என்கிறார் அங்கிதா.
ஒருபுறம் விளையாட்டு மறுபுறம் அலுவலகப் பணி:
அவர் அதிலிருந்து வெளிவர மட்டுமே ஒன்றரை ஆண்டுகள் தேவைப்பட்டது. அதன் பிறகு தனது கனவினை துறத்தி ஓடினார். அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்காக நடத்தப்படும் உலக அளவிலான பிரத்யேக தடகளப் போட்டிகளை பற்றி அறிந்து கொண்டார். அத்துடன் அந்த போட்டியில் இந்திய அணியின் வீரராகவும் தேர்வுசெய்யப்பட்டார். அப்பொது அவர் கூறியது நீங்கள் ஒரு விஷயத்தை ஆர்வமுடன் தொடர்ந்து மேற்கொண்டால், ஒரு நாள் அதில் நிச்சயம் வெற்றி பெறலாம்” என்று தன்னம்பிக்கையுடன் தெரிவித்தார். ஒருபுறம் விளையாட்டு போட்டிகளுக்கான பயிற்சியை மேற்கொண்டிருந்த அவர், மறுபுறம் தமது அலுவலக பணிகளையும் கவனிக்க ஆரமித்தார். காலயில் சில மணி நேரம் விளையாட்டு பயிற்சி செய்துவிட்டு அலுவலகம் சென்றுவிடுவார். பின்னர் மீண்டும் பணிகள் முடிந்ததும் பயிற்சி செய்வார். இது அவரின் வாழ்கைக்கு மிகவும் உத்வேகமாக இருந்தது என்று அவர் தெரிவித்தார்.
அங்கிதாவின் தீராத காதல்:
மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு, 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மாற்று அறுவை சிகிச்சை விளையாட்டு போட்டிகளில் அங்கிதா பங்கேற்றார். இந்த ஆண்டும் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக மாற்று அறுவை சிகிச்சை விளையாட்டு போட்டியிலும் பங்கேற்றார். அத்துடன் நீளம் தாண்டுதல் மற்றும் எறிபந்து போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களையும், மூன்று வெள்ளிப் பதக்கங்களையும் வென்று அசத்தி உள்ளார் அங்கிதா. அவர் இன்று உலகம் அறியும் சர்வதேச வீராங்கனையாக மட்டுமல்லாமல் தொழிலதிபராகவும், பேச்சாளராகவும் பன்முக திறமைகளை கொண்டுள்ளார். பொழுதுபோக்கு துறைகளில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை தொடங்கியும் உள்ளார். பல்வேறு துறைகளிலும் தனது திறமைகளை வெளிக்காட்டி வருகிறார். தனது கனவுகள் நினைவேறும் வரை நாம் ஓடிக்கொண்ட்டே இருக்க வேண்டும் அது நிச்சயம் ஒரு நாள் பலன் தரும் என்று கூறினார். அங்கிதா அவர்கள் தன் தாயைபோலவே வேறு ஒருவருக்கு இந்த மாறியான சூழ்நிலை வந்தால் மீண்டும் ஒரு கல்லீரல் தானம் செய்ய தயங்கமாட்டேன் என்று அவர் கூறினார். நம் வாழ்க்கையில் ஆயிரம் பிரச்சனைகள் வந்து கொண்டேதான் இருக்கும் அதற்காக நேரத்தை வீணாக்கினால் நாம் அங்கு இருக்கும் ஒரு வாய்பை வீணாக்குகிறோம் என்று அர்த்தம். அதனால் பிரச்சனைகளை கண்டு துவண்டு போகாமல் எதிர்நீச்சல் போட்டு நாம் மீண்டு வேண்டும்.
Discussion about this post