சர்வதேச யோகாதினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் விழ்ப்புணர்வு யோகா நிகழ்ச்சி நடைபெற்றது.
சர்வதேச யோகாதினத்தை முன்னிட்டு, யோகா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தூத்துக்குடி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் யோகாதின விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. உடலுக்கும் மனதுக்கும் ஆரோக்கியம் தரும் யோகா மூலம் மருத்துவமும் செய்யப்படுகிறது. இதில் செவிலியர் பயிற்சி மாணவிகள் 100 பேர் கலந்து கொண்டு பல்வேறு வகையான ஆசனங்களை நிகழ்த்தி காட்டினர். சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த நிகழ்ச்சியில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவர்கள் மற்றும் மாவட்ட சித்தா மருத்துவ அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Discussion about this post