சர்வதேச புலிகள் தினத்தை முன்னிட்டு கணக்கெடுக்கப்பட்ட புலிகளின் எண்ணிக்கை விவரங்களை பிரதமர் மோடி வெளியிட்டார்.
சர்வதேச புலிகள் தினம் இன்று கடைப்பிடிக்கப்படும் நிலையில், டெல்லியில் நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கை விவரங்கள் அடங்கிய புத்தகத்தை வெளியிட்டார். 2018 ஆண்டு கணக்குப்படி இந்தியாவில் 2 ஆயிரத்து 967 புலிகள் உள்ளதாக கூறியுள்ளார். 2014 ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி 2ஆயிரத்து 226 புலிகள் இருந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை உயர்ந்திருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். மேலும்,கடந்த 2010 ஆண்டு ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ் பர்க்கில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் புலிகளின் எண்ணிக்கையை 2022க்குள் அதிரிக்க திட்டமிட்ட நிலையில், 4 ஆண்டுகளுக்கு முன்பாகவே அந்த இலக்கை அடைந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
Discussion about this post