இமாச்சல பிரதேசம் ஷிம்லாவில் நடைபெற்ற நான்கு நாட்கள் சர்வதேச சிம்லா திருவிழாவில், ஏராளமான கலைஞர்கள் பல்வேறு பாரம்பரிய கலைகளை அரங்கேற்றினர்.
சிம்லாவில் ஆண்டுதோறும் சர்வதேச திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். சுற்றுலா பயணிகளை கவரும்வகையில் நடத்தப்படும் இந்தத் திருவிழாவில், சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் பங்கேற்பது வழக்கம்.
இந்த ஆண்டுக்கான திருவிழா, கடந்த நான்கு நாட்களாக நடைபெற்றது. இந்த திருவிழாவில், பல்வேறு கலைஞர்கள் பாரம்பரிய கலைகளை நிகழ்த்தி அசத்தினர். இதில் நடைபெற்ற பொய்க்கால் ஆட்டம் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
Discussion about this post