அமெரிக்காவில், கலிபோர்னியாவை சார்ந்தவர் டான் சம்மர்ஸ். இவருக்கு 20 வயதில் கீல்வாதம் என்கிற நோய் தாக்கி உள்ளது. மருத்துவர்கள் இன்னும் 10 வருடங்கள் கடந்த பிறகு உங்களுக்கு சிறுநீரகத்தில் பிரச்சினை வர வாய்ப்பு அதிகம் என்று கூறினார்கள்.
மருத்துவர்கள் கூறியபடியே டான் சம்மர்ஸ்க்கு 30 வயது ஆனதும் சிறுநீரகத்தில் பிரச்சனை வந்தது. உடனே மருத்துவமனைக்கு சென்று சிறுநீரகத்தை நன்கொடையாக கொடுக்கும் பட்டியலில் விண்ணப்பித்துள்ளார். ஆனால், இவருக்கு பொருத்தமாக கூடிய சிறுநீரகம் கிடைப்பது கடினம் என மருத்துவர்கள் கூறிவிட்டனர்.
இந்நிலையில், டான் சம்மர்ஸ் டேட்டிங் என்கிற இணையதளத்தில் லீசா என்ற பெண்ணை சந்தித்து பேசி வந்துள்ளார். அவரிடம் பிரச்சனையை பற்றி கூறியுள்ளார். அதன் பிறகு லீசா மருத்துவமனை சென்று சிறுநீரகத்தை பரிசோதித்த போது அவருடைய சிறுநீரகம் அப்படியே டான் சம்மர்ஸ்க்கு பொருந்தியது.
இதுபோன்று லட்சத்தில் ஒருவருக்குத்தான் அமையும் என மருத்துவர்கள் கூறினர். உடனே லீசா தன்னுடைய சிறுநீரகத்தை தானம் செய்ய முன்வந்தார். அதனால், இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து திருமணமும் செய்து கொண்டனர்.
இந்த தம்பதிகள் தற்போது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தங்கள் வாழ்க்கையில் சிறுநீரக நன்கொடை அளிப்பவர்களுக்கு ஆதரவு தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post