தஞ்சையில் 60 லட்சம் ரூபாய் செலவில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர், ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு 903 கோடி ரூபாய் செலவில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் சிவகங்கை பூங்கா புனரமைப்பு, குளங்கள் பராமரிப்பு, பூங்காக்கள் அமைத்தல், பெத்தண்ணன் திறந்தவெளி கலையரங்கம் சீரமைத்தல், குடிநீர் வசதி மேம்படுத்துதல், காமராஜர் மார்க்கெட் சீரமைத்தல் உள்பட பல்வேறு பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில் ஒரு பகுதியாக, திருவையாறு பேருந்து நிலையத்தில் 13 கோடியே 85 லட்சம் மதிப்பில், வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. பழைய பேருந்து நிலையமானது, 14 கோடியே 88 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட உள்ளது. இதற்காக அங்குள்ள கட்டடங்கள் எல்லாம் இடிக்கப்பட இருக்கிறது. இந்த நிலையில், தற்காலிக பேருந்து நிலையம் அமைப்பதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு, தார்ச்சாலை அமைக்கும் பணி, பயணிகள் நிற்பதற்கான இடவசதி உள்ளிட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
Discussion about this post