73வது சுதந்திர தினத்தை முன்னிட்டு தீவிரவாத தாக்குதல் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க இந்திய இலங்கை கடலோரப் பகுதிகளான ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், தனுஸ்கோடி, மன்னார் வளைகுடா, பாக்ஜலசந்தி, குருசடைத்தீவு உள்ளிட்ட பகுதியில் தமிழக கடலோர குழும காவல்துறையினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இருப்பதால், வழக்கத்தைவிட கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்துள்ளனர். ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில், குறிப்பாக வட மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வரும் அனைத்து ரயில்களிலும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
Discussion about this post