திருத்தணி அருகே விநாயகர் சதுர்த்தியையொட்டி, விநாயகர் சிலைகள் தயாரிப்பு பணி தீவிரமடைந்துள்ளது.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வரும் செப்டம்பர் மாதம் 2-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில், அரசு அனுமதி பெற்று விநாயகர் சிலைகளை வைத்து பக்தர்கள் வழிபாடு நடத்துவது வழக்கம். அந்தவகையில், விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக, சிலைகள் தயாரிக்கும் பணிகள் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, திருத்தணி பகுதியில், தண்ணீரில் எளிதில் கரையக் கூடிய, ஒரு அடி முதல் 12 அடி வரையிலான சிலைகள் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள சிலைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
Discussion about this post