சகோதரத்துவத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழகத்தில் மதவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் கமல்ஹாசன் புகுத்துவதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி குற்றம்சாட்டியுள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் அண்ணன், தம்பி, உறவுகளாக அனைத்து மதத்தினரும் வாழ்ந்து கொண்டிருக்கும் வேளையில், கமல்ஹாசன், மதக்கலவரங்களை தூண்டும் வகையில் பேசுவதை கண்டிப்பதாக கூறினார். கமல்ஹாசன் ஏன் இந்த கருத்தை கூறினார் என்பதை மத்திய உளவுத்துறை விசாரணை நடத்த வேண்டும் என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வலியுறுத்தியுள்ளார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கமல்ஹாசனின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் எனபதை கவனிக்க வேண்டும் என்றும், அறியாமையில் பேசிவிட்டதாக கமல்ஹாசன் வருத்தம் தெரிவித்தால், தான் பேசிய கருத்துக்களையும் திரும்ப பெற்றுக்கொள்வதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.
Discussion about this post