கோவை மாவட்டம் அருகே வெள்ளளூரில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்க 168 கோடி ரூபாய் ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஏற்கனவே இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 61 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படவுள்ள இந்த ஒருங்கிணைந்த பேருந்து நிலையயத்தில், ஒரே நேரத்தில் 140க்கும் அதிகமாக பேருந்துகள் நிறுத்தி வைக்க முடியும். இதன் மூலம் கோவையில் வாகன நெரிசலை முழுமையாக கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Discussion about this post