இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர் பணியிடங்களில் தற்காலிக ஆசிரியர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
வேலை நிறுத்தம் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டு தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் பணியிடங்களை, காலிப்பணியிடங்களாக கருதி உடனடியாக நிரப்ப பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள ஆசிரியர்களின் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. தற்காலிகமாக பணிபுரிய விருப்பம் தெரிவிக்கும் ஆசிரியர்களை கொண்டு பணியிடங்களை நிரப்ப உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
Discussion about this post