தமிழகம் முழுவதும் இதுவரை 2,951 பேர் டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை ஸ்டான்லி மருத்துவமனையின் காய்ச்சல் பிரிவில் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆய்வு மேற்கொண்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை சந்தித்து அவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். அப்போது சென்னையை பொருத்தவரை வட சென்னையில் டெங்கு பாதிப்பு அதிகளவு இருப்பதாகவும், அப்பகுதியில் அதிக கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகம் முழுவதும் இதுவரை டெங்கு காய்ச்சல் அறிகுறியுடன் 2 ஆயிரத்து 951 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும், டெங்கு காய்ச்சலால் எந்த உயிரிழப்பும் ஏற்படக்கூடாது என்ற வகையில் அரசு செயல்படுவதாகவும் தெரிவித்தார்.
Discussion about this post