தனியார் பள்ளிகளின் வாகனங்களில் கள்ளக்குறிச்சி சார் ஆட்சியர் ஸ்ரீகாந்த் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சிக்குட்பட்ட தனியார் பள்ளிகளின் வாகனங்களில் நடந்த இந்த ஆய்வில் வாகனங்களின் பாதுகாப்பு மற்றும் உறுதி தன்மை பரிசோதிக்கப்பட்டது. மேலும் வாகனங்களின் தரம், அவசர வழி வசதி, மருத்துவ உபகரணங்கள் மற்றும் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்டவை பரிசோதிக்கப்பட்டன். ஆய்விற்கு பின்பு ஓட்டுனர்களுக்கு விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பான பயணம் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் கள்ளக்குறிச்சி அட்சியர் தலைமையில் பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
Discussion about this post