துரைமுருகன் வீட்டில் வருமான வரி மற்றும் தேர்தல் பறக்கும் படையினரின் சோதனை குறித்த முழு விவரம் கிடைத்த பிறகே தெரிவிக்கப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ கூறியுள்ளார்.
இந்திய தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா 2 நாள் பயணமாக தமிழகம் வரவுள்ளதாகவும் அங்கீகரிக்கப்பட்ட 10 தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுடன் ஏப்ரல் 2 ஆம் தேதி மாலையும், தேர்தல் அதிகாரிகளுடன் ஏப்ரல் 3ம் தேதி மாலையும் அவர் ஆலோசனை நடத்தவுள்ளதாக சத்ய பிரதா சாஹு குறிப்பிட்டார்.
தமிழகம் முழுவதும் இதுவரை நடத்தப்பட்ட வாகன சோதனையில் 70 கோடியே 90 லட்சம் ரொக்கமும் 88 கோடியே 27 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், போலீசார் அளித்த தகவலின்பேரில் துரைமுருகனின் வீடு மற்றும் கல்லூரிகளில் சோதனை நடைபெற்றதாக குறிப்பிட்டார். சோதனையின் முழு விவரம் கிடைத்த பிறகே அதுகுறித்து தெரிவிக்கப்படும் என்று சத்ய பிரதா சாஹூ கூறினார்.