பெங்களுரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவிடம் 2 நாட்களாக நடைபெற்று வந்த வருமானவரித்துறையினரின் விசாரணை நிறைவு பெற்றது.
கடந்த வருடம் சசிகலா வீடு மற்றும் அவரது உறவினர்களின் வீடுகளில் நடைபெற்ற சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இதன் அடிப்படையில் சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவிடம் விசாரணை நடத்த வருமான வரித்துறையினர் முடிவு செய்தனர்.
இந்த நிலையில் சசிகலாவிடம் 2 நாட்கள் விசாரணை நடத்த சிறைத்துறை அதிகாரிகளிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் அனுமதி பெற்றனர். முதற்கட்டமாக நேற்று 7 மணி நேரம் சசிகலாவிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இன்று காலை மீண்டும் விசாரணை தொடங்கி மாலை வரை நடைபெற்றது. சுமார் 8 மணி நேரம் நடைபெற்ற விசாரணையில் ஒரு பெண் அதிகாரி உள்ளிட்ட 5 அதிகாரிகள் சசிகலாவிடம் துருவித்துருவி கேள்வி எழுப்பினர். இதில் பல முக்கிய தகவல்கள் பெறப்பட்டதாக கூறப்படுகிறது.
Discussion about this post