நெல்லை மாவட்டம் தென்காசியைச் சேர்ந்த தங்கத்துரை என்ற விவசாயி பறவைகளிடமிருந்து சோளத்தைப் பாதுகாக்க புதுமையான கருவி ஒன்றை வடிவமைத்துள்ளார்.
செயலிழந்த மின் விசிறியின் இறக்கையுடன் செயினை இணைத்து காற்று வீசும் திசையில் வைத்துள்ள அவர், அதனுடன் ஒரு தகர டப்பாவை இணைத்துள்ளார். காற்று வீசும் போது மின் விசிறியின் இறக்கைகள் சுழுலும் போது, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள செயின் தகர டப்பாவில் பட்டு தொடர்ச்சியாக ஒலி எழுப்புகிறது.
இந்த சத்தத்தினால் பறவைகள் வருகை குறைந்துள்ளதாக தெரிவிக்கும் தங்கத்துரை, பறவைகளால் ஏற்படும் பயிர்சேதம் 80 சதவீதம் குறைந்துள்ளதாக கூறுகிறார். மொத்தம் 7 கருவிகளை தன்னுடைய வயலை சுற்றி தங்கத்துரை வைத்துள்ளார். பத்தாம் வகுப்பை கூட தாண்டாத அவர், யூடியூப்பை பார்த்து இந்தக் கருவியைத் தயாரித்தாக கூறுவது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.