மேக் இன் இந்தியா திட்டத்தால் தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது – ரவிசங்கர் பிரசாத்

ஆதார் தகவல்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும், அதை யாரும் திருட முடியாது என்றும் மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறியுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நிதி ஆயோக் முதன்மைச் செயலாளர் அமிதாப்காந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், ஆதார் தகவல்கள் யாரும் திருட முடியாத அளவுக்கு பாதுகாப்பாக உள்ளதாக தெரிவித்தார். “மேக் இன் இந்தியா” திட்டத்தால் தகவல் தொழில்நுட்பம் அபாரமாக வளர்ந்துள்ளதாகவும், இதனால் இந்தியாவில் சாதாரண மனிதனுக்கும் தொழில்நுட்ப அறிவு சென்று சேர்ந்திருப்பதாகவும் குறிப்பிட்டார்.

Exit mobile version