நான்கு கோடி இந்தியர்களின் தனிநபர் விவரங்கள் TRUECALLER செயலி வழியாக திருடப்பட்டு கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செல்போன்களின் எண்களைக் கொண்டு அதன் உரிமையாளரை அறிய உதவும் TRUECALLER செயலி, தற்போது பெரும்பாலான மக்களால் உபயோகிக்கப்பட்டு வருகிறது. இந்த TRUECALLER செயலியில் பெரும்பாலானோர் தங்கள் முழு விவரங்களையும் பதிவு செய்துள்ளனர். இதனை பயன்படுத்தி HACKER-க்கள் பலரது விவரங்களை சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர். தற்போது இந்தியாவின் முக்கிய நகரங்கள் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 4.75 கோடி பேரின் விவரங்கள் TRUECALLER மூலம் HACK செய்யப்பட்டு விற்கப்படுவதாக CYBER CRIME பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதிகாரிகளின் இந்த தகவலால் நாடுமுழுவதும் TRUECALLER செயலியை உபயோகித்து வரும் பலகோடி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Discussion about this post