11,12ம் வகுப்புகளில் மொழிப்பாடம் தேர்ந்தெடுப்பது தொடர்பான வெளியான தகவல்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது.
9,10 ஆம் வகுப்புகளுக்கு மொழிப்பாடங்களில் உள்ள இரண்டு தாள்களை ஒரே தாள்களாக மாற்றி தேர்வு நடத்தப்படும் என்றும், 11,12ம் வகுப்புகளில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் ஏதாவது ஒரு மொழியை விருப்பப் பாடமாக தேர்வு செய்து படிக்கலாம் என்றும் பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் மொழிப்பாடங்கள் குறித்து வெளியான தகவல் உண்மையல்ல என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும், ஆலோசனையும் நடைபெறவில்லை எனவும் பள்ளிக் கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. மாணவர்கள் இது குறித்து குழப்பமடைய தேவையில்லை எனவும் தெரிவித்துள்ளது.
Discussion about this post