பசியை போக்கும் உன்னதப் பணி!
ஒவ்வொரு நாளும் எப்படி போகின்றது என்பது கூடத் தெரியாமல் நாம் அந்த அளவிற்கு வேலை செய்துக்கொண்டு இருக்கிறோம். அவரவர் படித்த துறையிலும், பிடித்த துறையிலும் வேலை பார்கின்றனர். ஆனால் உண்மையை சொல்லப்போனால் லட்சக்கணக்கான மக்கள் அவர்கள் படித்தப்பிறகு வேலை கிடைக்காமல், வேறு துறைகளில் வேலைப் பார்த்து வருகின்றனர். அதும் இன்றைய இளைஞர்களின் நிலைமை என்பது மிகவும் மோசமானதான் உள்ளது. குறிப்பாக, படித்து முடித்து விட்டு வேலைக் கிடைக்காமல் பல இளைஞர்கள் டெலிவிரி பாய் அதாவது உணவு டெலிவிரி செய்யும் வேலைப்பார்த்து வருகின்றன. இவர்களின் நிலை நம்மில் பாதி மக்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு உண்டு. ஏனென்றால், பலர் இந்த வேலைக்கு கட்டாயத்தின் அடிப்படையிலும், சந்தர்ப்ப சூழ்நிலையாலும் வேலைப்பார்க்க வருகின்றனர். இவர்களின் வாழக்கை முறையானது மிகவும் மோசமாக உள்ளது.
பணியில் எதிர்கொள்ளும் சிக்கல்கள்:
ஏனென்றால், இவர்கள் ஒரு ஆர்டர் எடுக்கும் இடத்தில் பல இன்னல்களையும், அவமானங்களையும் சந்திக்கின்றனர். ஒருமனிதருக்கு அவர் பார்க்கும் வேலையை வைத்து மதிப்பு அளிக்கப்படுமானால் நாம் எவ்வகையான கால சூழலில் வாழ்ந்து வருகிறோம் என்பதை நாம் சற்று யோசித்து பார்க்க வேண்டும். அதுபோலவே டெலிவிரி செய்யும் நபர்கள் தரக்குறைவாக நடத்தப் படுவதாக நாம் அன்றாடம் பார்க்கும் சமூக வலைதளங்களிலும், ஏன் செய்திகளிலும் பார்த்து இருப்போம். மழை, வெயில், பனி என இயற்கையை சமாளித்தபடி இரவு பகல் பார்க்காமல் பணி செய்து வருகிறார்கள். மழை நேரங்களில் அவர்கள் பணி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெறும். பெரும்பாலும் நகரங்களிலும், வீதிகளின் சாலை ஓரத்திலும் ஆர்டருக்காக மொபைல் போனை பார்த்தபடி கத்திருப்பார்கள். அது அவர்கள் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கும் நேரமும் கூட என்று சொல்லலாம். இவ்வாறு இருக்க மற்றவர்களின் பசிப்பிணியை போக்கும் மகத்தான பணியை செய்து வரும் உணவு டெலிவரி நபர்களுக்கு சற்று ஓய்வு எடுக்கும் விதமாக ‘ரிலாக்ஸ் ஸ்டேஷன்’ அமைத்துள்ளார் இளைஞர் ஒருவர்.
ரிலாக்ஸ் ஸ்டேஷன்..!!
மும்பையை சேர்ந்த சித்தேஷ் லோகரே என்ற பிரபல ஊடகவியலாளர் கடும் மழையிலும் வெயில்களிலும் வேலைப் பார்த்து வரும் டெலிவிரி முகவர்களுக்கு சற்று ஓய்வு கொடுக்கும் விதமாக சிறிய ரிலாக்ஸ் ஸ்டேஷனை உருவாக்கி உள்ளார். சாலையோரம் அமைக்கப்பட்டுள்ள ஸ்டால், முகவர்களுக்கு தேநீர், சமோசா மற்றும் தின்பண்டங்கள் மற்றும் ரெயின்கோட்களை வழங்குகிறார் சமுகவலைத்தளங்களின் இன்ஃப்ளூயன்சரான சிதேஷ். இவரின் செயலானது டெலிவிரி முகவர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து மக்களிடமும் இருந்து பாராட்டுகள் குவிந்த வண்ணமாகதான் உள்ளது. சிதேஷ் அவர்களின் ‘ரிலாக்ஸ் ஸ்டேஷன்’ செயலானது சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்களால் அதிகமாக பகிரப்பட்டு. அனைத்து மக்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளது. சிதேஷ் லோகாவின் செயலுக்கு மக்கள் அனைவரும் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
Discussion about this post