இந்திய சீன எல்லை பகுதியான லடாக்கின் கல்வான் பள்ளத்தாக்கிலிருந்து இந்திய வீரர்கள் வெளியேறிய நிலையில், பங்கோங் சோ பகுதியில் இருந்து, சீன படைகள் வெளியேறி வருகின்றன.
லடாக் கிழக்கு எல்லையில் உள்ள பங்கோங் சோ, கல்வான் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில், கடந்த மே மாத தொடக்கத்தில் சீன படைகள் ஊடுருவியதால், கடந்த மாதம் 15-ந்தேதி கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவத்துக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் இந்திய வீரர்கள் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இந்த நிலையில், எல்லை பிரச்னை குறித்து இரு நாட்டு உயர்மட்டக் குழு ஆலோசனை நடைபெற்றது. ஆலோசனையில் சுமூக தீர்வு காணப்பட்ட நிலையில், எல்லையில் குவிக்கப்பட்ட இந்திய ராணுவ படையினர் திரும்பி பெறப்பட்டனர். இதனையடுத்து, பங்கோங் சோ பகுதியில் இருந்து சீன படைகள் வெளியேறி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டது. பங்கோங் ஏரியில் ரோந்து பணிகளுக்காக சீனா நிறுத்தி வைத்திருந்த படகுகளும், எடுத்துச் செல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Discussion about this post