நேபாளத்தில் 10 நாட்கள் நடைபெறும் இந்திர ஜாத்ரா திருவிழா கோலாகலமாகத் தொடங்கியது.
நேபாளத்தில் கொண்டாடப்பட்டு வரும் திருவிழாவிற்காக 4 வயதான பெண் குழந்தை, நேபாள நாட்டு இந்துக்களின் மரபுப்படி தெய்வமாகத் தேர்வு செய்யப்பட்டார். குமாரி என்ற பெயரிலான அந்தக் குழந்தையைப் பொதுமக்கள் வழிபட்டனர். திருவிழாவின் முதல் நாளில் தெய்வமாகக் கருதப்படும் குழந்தை அரண்மனையிலிருந்து வெளியே கொண்டு வரப்பட்டு மக்கள் முன் அருள் பாலித்தார். விழா முடிந்ததும் அந்தக் குழந்தை மீண்டும் பல்லக்கின் மூலம் அரண்மனைக்கு அழைத்துச் செல்லப்படுவார். மழை வளம் பெருகி மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ, வருண பகவானுக்கு நன்றி சொல்லும் வகையில் இந்திர ஜாத்ரா விழா நேபாள மக்களால் கொண்டாடப்படுகிறது.
Discussion about this post