ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட 130 தீவிரவாதிகள் பாகிஸ்தான் மண்ணில் இல்லை என்பதை பிரதமர் இம்ரான்கானால் சொல்ல முடியாமா? என இந்திய வெளியுறவுத்துறை முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா கேள்வி எழுப்பியுள்ளார்.
காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா.வில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பேசியதற்கு இந்திய வெளியுறவுத்துறை முதன்மை செயலாளர் விதிஷா மைத்ரா ஐ.நா.வில் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், பாக்கிஸ்தான் பிரதமரின் அணுசக்தி மிரட்டல் என்பது தலைமை பண்பிற்கு சரியானதல்ல
என்றும், ஐ.நா.வால் தடை செய்யப்பட்ட 130 தீவிரவாதிகள், ஐ.நா கருப்பு பட்டியலில் உள்ள 25 தீவிரவாதிகள் பாகிஸ்தான் மண்ணில் இல்லை என்பதை இம்ரான்கானால் சொல்ல முடியுமா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். காஷ்மீர், லடாக் விவகாரத்தில், நடுநிலைத்தன்மை கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும், பயங்கரவாத கொள்கைகளை தொழிலாக கொண்டு செயல்படும் எவரும் இந்திய மக்களுக்காக பேச தேவையில்லை என்றும் அவர் கூறினார்.
Discussion about this post