நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கொரோனா பேரிடரால் ஓராண்டுக்கும் மேல் தொழில்துறை கடும் பாதிப்புக்கு உள்ளாகி வரும் நிலையில், கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜிடிபி வீழ்ச்சி அடைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2020-21ம் நிதியாண்டுக்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.3 சதவிகிதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது.
இருப்பினும் நிதியாண்டின் கடைசி காலாண்டான ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில் ஜிடிபி 1.6 சதவிகிதம் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
தற்போது கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் சூழலில், நடப்பு நிதியாண்டின் முதல் மற்றும் இரண்டாம் காலாண்டிலும் மந்தநிலை தொடரும் என வல்லுநர்கள் கணித்துள்ளனர்
Discussion about this post