இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது . முதல் போட்டி நேற்று முன்தினம் தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்புக்கு 285 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில், நேற்று இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கிய இங்கிலாந்து அணி 287 ரன்கள் எடுத்த நிலையில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர், இதனையடுத்து வந்த வீரர்களும் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சில் குறைந்த ரன்களில் எடுத்து ஆட்டமிழந்தனர். 5 விக்கெட்டுகளுக்கு 100 ரன்கள் மட்டுமே எடுத்து இந்திய அணி தடுமாறியது. இந்தநிலையில், ஹர்திக் பாண்டியா – கேப்டன் கோலி இணை நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டெடுத்தது. இந்திய அணி 274 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் கோலி, 149 ரன்கள் எடுத்தார். இங்கிலாந்து அணி 13 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இந்தநிலையில் தனது 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆட்ட நேர முடிவில், ஒரு விக்கெட் இழப்புக்கு 9 ரன்கள் மட்டுமே எடுத்து, 22 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
Discussion about this post