கொரோனா பரிசோதனை மையங்களில் மட்டுமே பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் வீடுகளில் சுயமாகப் பரிசோதனை செய்தல் கூடாது என்றும் ஐ.சி.எம்.ஆர் அறிவுறுத்தியிருந்த நிலையில், தற்போது, புனேவைச் சேர்ந்த மைலேப் நிறுவனம் தயாரித்த கோவிசெல்ஃப் (CoviSelf (PathoCatch)) கோவிட் -19 OTC Antigen LF என்கிற வீட்டு உபயோக சுயபரிசோதனை கருவிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
எனினும் “கண்மூடித்தனமான சோதனைகள் செய்யக்கூடாது. பயனர் கையேட்டில், உற்பத்தியாளர் விவரித்துள்ள நடைமுறைகளின் படி மட்டுமே வீட்டு சோதனைகள் நடத்தப்பட வேண்டும்” என்றும் ஐ.சி.எம்.ஆர் பரிந்துரைத்துள்ளது.