டெங்கு காய்ச்சலானது இந்தியாவில் மிகப்பெரிய அளவில் உயிரிழப்புகளை ஏற்படுத்தும் காய்ச்சலாகும். இது ஏடெஸ் வகை கொசுக்களின் மூலம் பரவக்கூடியது. ஆகவே மழைகாலங்களில் வீட்டினருகே நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும் குப்பைகள். கழிவுகள் போன்றவற்றினை வீட்டிலிருந்து விரைவில் அப்புறப்படுத்துவது நல்லது. இந்தியாவில் இந்தக் காய்ச்சலால் பலர் இறந்து வருவதால் இதனைத் தடுக்க பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கையாளப்பட்டு வருகின்றன.
தற்போது டெங்கு காய்ச்சலை ஒழிப்பதற்காக இந்தியாவில் முதல் முறையாக டி.என்.ஏ தடுப்பூசிகள் அறிமுகமாகி உள்ளன. இந்தியாவின் தேசிய உயிரி-அறிவியல் மையம் இந்த ஊசியை ஒன்பது நாடுகளுடன் சேர்ந்து கண்டுபிடித்துள்ளது. இந்த தடுப்பூசியானது மிகவும் சிறிய வகையிலான ஊசியாகும். இது நேரடியாக டி.என்.ஏ செல்களில் உள்ள நோய்க்கூறுகளை அழிக்கக்கூடியது. இந்த டி.என்.ஏ தடுப்பூசிகளை மூன்றாம் தலைமுறைத் தடுப்பூசிகள் என்று சொல்வார்கள். இதனை ZyCoV-D என்று அழைக்கிறார்கள். இது கோவிட்-19 க்கும் மிக நல்ல மருந்து என்று சொல்கிறார்கள்.