நேப்பியரில் நடைபெறும் இந்தியாவுக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணியின் துவக்க வீரர்கள் ஆட்டமிழந்தனர். ஆஸ்திரேலிய பயணத்தை முடித்து, நியூசிலாந்தில் இந்திய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புடன் நேப்பியரில் முதலாவது ஒருநாள் போட்டி தொடங்கி உள்ளது. டாஸ் வென்ற நியூஸிலாந்து கேப்டன் கனே வில்லியம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன் படி தொடக்க வீரர்களாக களம் இறங்கிய மார்டின் கப்தில் மற்றும் காலின் முன்ரோ ஆகியோர் ஷமி பந்து வீச்சில் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். இறுதியில் நியூசிலாந்து 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
Discussion about this post