சீனாவில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும், அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தமிழக அரசுக்கு சீன தூதரகம் விளக்கம் அளித்துள்ளது.
சீனாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் அங்குள்ள தமிழர்களின் நிலை குறித்து, தமிழக அரசு இந்திய தூதரகம் மூலம் சீன அரசிடம் விளக்கம் கேட்டிருந்தது. இந்நிலையில் தமிழக அரசுக்கு சீன அரசு அனுப்பியுள்ள பதில் கடிதத்தில், கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வகையில் சீனாவில் வசிக்கும் இந்தியர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும், அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விளக்கம் தரப்பட்டுள்ளது. உஹான் பகுதியில் பாதுகாப்பாக இருக்கும் மக்களுடன் இந்திய தூதரகம் 24 மணி நேரமும் தொடர்பில் இருப்பதாக சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.
Discussion about this post