இந்தியர்கள் பிரேசில் வர விசா தேவையில்லை என்று அந்நாட்டு அதிபர் ஜயர் போல்சொனாரோ தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் அதிபராகப் பொறுப்பேற்ற ஜயர் போல்சொனாரோ, குறிப்பிட்ட சில வளர்ந்த நாடுகளை சேர்ந்தவர்கள் பிரேசில் வர விசா தேவையில்லை என்ற கொள்கையை நடைமுறைப்படுத்தினார். அந்த வகையில், அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள், பிரேசில் நாட்டுக்கு செல்வதற்கு விசா தேவையில்லை. இந்த நிலையில், தற்போது விசா விதியில் இருந்து இந்தியர்களுக்கும், சீனர்களுக்கும் விலக்கு அளிக்கப்படுவதாக பிரேசில் அதிபர் ஜயர் போல்சொனாரோ அறிவித்துள்ளார். இந்தியா, சீனாவை சேர்ந்தவர்கள் பிரேசில் செல்வதாக இருந்தால் இனி விசா பெறத்தேவையில்லை. பாஸ்போர்ட் வைத்திருந்தாலே அனுமதிக்கப்படுவர்.
Discussion about this post