மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில், இந்திய அணி அயர்லாந்தை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றதுடன் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.
மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, தனது முந்தைய போட்டிகளில் நியூஸிலாந்தை 34 ரன்கள் வித்தியாசத்திலும், பாகிஸ்தானை 7 விக்கெட் வித்தியாசத்திலும் வீழ்த்தியது.
ப்ரொவிடன்ஸில் நடந்த மூன்றாவது போட்டியில் அயர்லாந்தை எதிர்கொண்டது. டாஸ் வென்ற அயர்லாந்து ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து, இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய மிதாலி ராஜ், ஸ்மிருதி மந்தனா சிறப்பான தொடக்கம் தந்து முதல் விக்கெட்டுக்கு 67 ரன்கள் சேர்த்தனர்.
அதன் பிறகு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. 20 ஓவர் முடிவில் இந்தியா 145 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக மிதாலி ராஜ் 51 ரன்களை குவித்தார்.