ஒலிம்பிக் ஹாக்கி தகுதிச்சுற்று ஆட்டத்தில் இந்திய அணிகள் சாதனை

2020 ம் ஆண்டு ஜப்பான் டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய மகளிர் மற்றும் ஆடவர் ஹாக்கி அணிகள் தகுதிபெற்றுள்ளன…

புவனேஷ்வரில், இந்தியா மற்றும் ரஷ்ய ஆடவர் ஹாக்கி அணிகளுக்கு இடையே நடந்த ஒலிம்பிக் தகுதிச் சுற்று முதல் ஆட்டத்தில், 4க்கு 2 என்ற கோல் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றது. இதனைத்தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் சுற்று ஆட்டத்திலும், 7 க்கு1 என்ற கோல் கணக்கில் ரஷ்ய அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது. இதன் மூலம் 2020-ம் ஆம் ஆண்டு ஜப்பான், டோக்கியோவில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு இந்திய ஆடவர் அணி தகுதிபெற்றுள்ளது.

Exit mobile version