இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 3வது ஒருநாள் போட்டி ராஞ்சியில் இன்று நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்திய அணி வீரர்கள், புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ராணுவ தொப்பிகளை அணிந்து இன்று விளையாடி வருகின்றனர். மேலும், நாட்டுமக்கள் ராணுவத்திற்கு நிதி வழங்க ஊக்கப்படுத்த இந்திய அணி வீரர்கள் இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் டோனி, வீரர்களுக்கு இந்த தொப்பியை வழங்கினார். டோனிக்கு கேப்டன் விராட் கோஹ்லி வழங்கினார்.
#TeamIndia will be sporting camouflage caps today as mark of tribute to the loss of lives in Pulwama terror attack and the armed forces
And to encourage countrymen to donate to the National Defence Fund for taking care of the education of the dependents of the martyrs #JaiHind pic.twitter.com/fvFxHG20vi
— BCCI (@BCCI) March 8, 2019
அதே போல் உலக மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக, மைதனாத்தில் பிங்க் பலூன்கள் பறக்கவிடப்பட்டன.
The BCCI wishes all the women a very happy #InternationalWomensDay pic.twitter.com/4qkEkTDZCu
— BCCI (@BCCI) March 8, 2019
Discussion about this post