உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி ஏப் 15 அறிவிப்பு

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடும் இந்திய அணி வரும் 15ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது.

12வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் வரும் மே மாதம் 30ஆம் தேதி தொடங்கி ஜூலை 14ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இங்கிலாந்தில் உள்ள 10 நகரங்களில் 11 ஸ்டேடியங்களில் 48 போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. மே 30ஆம் தேதி தொடங்கும் முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி தென்ஆப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. இதனைத்தொடர்ந்து இந்தியா தனது முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்கா அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி ஜீன் 5ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தநிலையில், உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியை இந்திய கிரிக்கெட் தேர்வு குழு= வரும் 15 ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

Exit mobile version