இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி போர் அல்ல என்று கூறியிருக்கும் முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி கேப்டன் வாசிம் அக்ரம், போட்டியை பொறுமையாக கண்டுகளியுங்கள் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் மோதும் ஆட்டத்தை 100 கோடி ரசிகர்கள் எதிர்பார்த்திருப்பதாக கூறினார். மிகவும் எதிர்பார்ப்பு நிறைந்த இந்த போட்டியை இருநாட்டு ரசிகர்களும் பொறுமையாக பார்த்து ரசிக்க வேண்டும் என கோரியிருக்கும் வாசிம் அக்ரம், போட்டி என்று வந்துவிட்டால் ஒரு அணி வெற்றி பெறுவதும் மற்றொரு அணி தோல்வி அடைவதும் சகஜம் என தெரிவித்துள்ளார். இந்த போட்டியை போர் என நினைப்பவர்கள் உண்மையான கிரிக்கெட் ரசிகராக இருக்க முடியாது என்றும் வாசிம் அக்ரம் கூறி உள்ளார். இந்திய அணியின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு வலுவான நிலையில் இருப்பதாகவும் வாசிம் அக்ரம் தெரிவித்தார்.
Discussion about this post