இந்திய பங்கு சந்தைகள் இன்று சரிவுடன் தொடங்கியது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கியதும் இந்திய பங்கு சந்தைகள் சரிவை எதிர்கொண்டன. மும்பை பங்கு சந்தையான சென்செக்ஸ் 84.04 புள்ளிகள் குறைந்து 34,649 புள்ளிகளாக இருந்தது.
அதேபோல், தேசிய பங்கு சந்தையான நிஃப்டியின் மதிப்பும் 35 புள்ளிகள் குறைந்து, 10,436 புள்ளிகளாக இருந்தது. அதே சமயம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 53 பைசாகள் உயர்ந்து 73 ரூபாய் 87 காசுகளாக உள்ளது.