கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின்னர் இன்று மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது

கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு பின்னர் இன்று மீண்டும் நாடாளுமன்றம் கூடுகிறது. இந்நிலையில்  முத்தலாக் சட்ட மசோதா மீது விவாதம் நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 11ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. எதிர்க்கட்சிகள் ரபேல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களை முன்வைத்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. தமிழக எம்பிக்கள் மேகதாது குறித்தும், ஆந்திர எம்பிக்கள் மாநில சிறப்பு அந்தஸ்து கோரியும், தொடர்ந்து வலியுறுத்தி வருவதால் சபை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.இன்று நடக்கும் கூட்டத்தில் முத்தலாக் சட்ட மசோதா மீது விவாதம் நடைபெறுகிறது. இந்த மசோதாவை பாஜக நிறைவேற்ற துடிக்கும் வேளையில் மசோதாவுக்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனிடையே இன்று நடைபெறும் கூட்டத்தில் அனைத்து உறுப்பினர்களும் ஆஜாராக வேண்டும் என பாஜக கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

 

Exit mobile version