வாரத்தின் முதல்நாளான இன்று தொடக்கம் முதலே இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருவதால் முதலீட்டாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
விடுமுறைக்கு பின் இன்று தொடங்கிய இந்திய பங்குச்சந்தைகள் தொடக்கம் முதலே கடும் வீழ்ச்சியை சந்தித்தன. 10 சதவீதத்துக்கும் மேல் சரிந்ததால், மும்பை பங்குச்சந்தை வர்த்தகம் 45 நிமிடங்களுக்கு நிறுத்தப்பட்டது. பின்னர் மீண்டும் பங்குச்சந்தை தொடங்கியுள்ள நிலையில், சரிவுடனேயே வர்த்தம் நடைபெற்று வருகிறது.
11.30 மணியளவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 3 ஆயிரத்து 368 புள்ளிகள் சரிந்து 26 ஆயிரத்து 506 புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்றது. அதேபோல், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 8 ஆயிரத்திற்கும் குறைவான புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
Discussion about this post